Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சீனாவுடனான அதிகாரப்போட்டிக்கு மத்தியில் பசுபிக் நாடுகளின் மாநாட்டை நடத்துகின்றார் பைடன்...!

 

வோசிங்டனுடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவுகளைகொண்டுள்ள பசுபிக்கில் சீனா தன்னை விஸ்தரித்துவரும் நிலையில் செப்டம்பரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பசுபிக் நாடுகளின் மாநாட்டை நடத்தவுள்ளார்.

செப்டம்பர் 28 29ம் திகதிகளில் பசுபிக் நாடுகளின் மாநாடு வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது.

வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ள முதலாவது பசுபிக் மாநாடு சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கை முன்னோக்கி நகர்த்தும் என வெள்ளை மாளிகை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பசுபிக் தீவுகள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினையான காலநிலை மாற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பசுபிக் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்,கடல்சார் பாதுகாப்பு கொவிட்டிற்கு எதிரான போராட்டம் குறித்தும் பைடன் பசுபிக் தலைவர்களுடன் உரையாடுவார்.

இந்த உச்சிமாநாடு பசுபிக்தீவுகள் மற்றும் பசுபிக் பிராந்தியத்துடனான அமெரிக்காவின் ஆழமான மற்றும் நீடித்த கூட்டாண்மையை நிரூபிக்கும் என அறிக்கையில் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை இந்த உறவு பகிரப்பட்ட வரலாறு விழுமியங்கள் மக்களிற்கு இடையிலான உறவுகளை அடிப்படையாக கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை மாநாட்டில் ஆகிய நாடுகளை கலந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்தமாதம் டொங்காவி;ற்கான விஜயத்தின் போது திகதிகளை குறிப்பிடாமல் பிரதி இராஜாங்க செயலாளர் வென்டி வெர்மன் இந்த மாநாடு குறித்து அறிவித்திருந்தார்.

ஏப்பிரல் மாதம் சீனா சொலமன் தீவுகளுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதை தொடர்ந்தும் பிராந்தியத்துடன் வெற்றிபெறாத பாரிய உடன்படிக்கைக்கு முயற்சி செய்ததை தொடர்ந்தும் புவிசார் அரசியலில் இதுவரை நாட்களாக கவனத்தை பெறாமலிருந்த கிழக்கு பசுபிக் தற்போது கவனத்தை பெற தொடங்கியுள்ளது.குறிப்பாக அமெரிக்காவின் கவனத்தை பெற ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்க கப்பல்கள் தனது துறைமுகத்தில் எரிபொருள் மீள்நிரப்புதலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்க மறுத்த சொலமன் தீவுகள் சீனா அந்த பகுதியில் அகலக்கால் பதிப்பதற்கு உதவக்கூடும் என வோசிங்டனும் அதன் சகாவான அவுஸ்திரேலியாவும் அச்சம்கொண்டுள்ளன.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli