மியன்மாரி;ல் கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுதாக்குதல் காரணமாக 80க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கச்சின் சுதந்திர இராணுவம் என்ற கிளர்ச்சியாளர்கள் குழுவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என கிளர்ச்சிக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கச்சின் மாகாணத்தில் உள்ள கன்சி கிராமத்தில் கச்சின் சுதந்திர இராணுவம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வை இலக்குவைத்து விமானதாக்குதல்கள் இடம்பெற்றன மூன்று குண்டுகள் வீசப்பட்டன என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.



மூன்று பாரிய சத்தங்களை கேட்டோம் அவை கட்டிடங்களை தரைமட்டமாக்கின பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் நான்கு கச்சின் பாடகர்கள் உள்ளனர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு காயமடைந்தவர்களை கொண்டு செல்வதற்கு மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இராணுவத்தினர் தடுத்தனர் எனவும்தகவல்கள் வெளியாகியுள்ளது.

கச்சின் மாகாணத்தில் மியன்மார் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களிற்கும் இடையில் பல வருடங்களாக மோதல்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் உருவாகியுள்ள புதிய எதிர்ப்பு குழுக்களிற்கு கச்சின் கிளர்ச்சியாளர்கள் வழங்கிய ஆதரவிற்காக மியன்மார் இராணுவம் மேற்கொண்ட பழிவாங்கும் நடவடிக்கை இது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh