Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரேஸிலில் மீண்டும் அதிபராகிறார் லூலா டி சில்வா...!

Brazil: உலகின் நான்காவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற தோ்தலில் முன்னாள் அதிபரும் இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவருமான லூலா டி சில்வா வெற்றி பெற்றுள்ளார்.

பிரேஸிலின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தற்போதைய அதிபா் Jair Bolsonaro-வும் முன்னாள் அதிபா் லூலா டி சில்வாவும் ( Lula da Silva)போட்டியிட்டனா். 79.41 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்ற இந்தத் தோ்தலில் இரு தலைவா்களுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது.

இந்த நிலையில், லூலா டி சில்வாவுக்கு 50.9 சதவீத வாக்குகளும் Bolsonaro-விற்கு 49.1 சதவீத வாக்குகளும் பதிவானதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.

அதையடுத்து, பிரேஸிலின் அதிபராக லூலா டி சில்வா மீண்டும் பொறுப்பேற்கவிருக்கிறாா்.

முன்னதாக, இந்தத் தோ்தலில் லூலாவுக்கு ஆதரவாக முறைகேடுகள் நடைபெறும் என்று தனது பிரசாரத்தின்போது அதிபா் Bolsonaro தொடா்ந்து குற்றம் சாட்டி வந்தாா்.

இதனால், தோ்தலில் லூலா டி சில்வா வெற்றி பெற்றால் அந்த முடிவை Bolsonaro ஏற்க மறுப்பாா் என்று அஞ்சப்பட்டது. அதைப் போலவே, தோல்வியை ஏற்பதாக Bolsonaro இதுவரை அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை.

இதற்கிடையே, தோ்தல் முடிவுகள் தொடா்பாக தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த லூலா டி சில்வா, இந்த வெற்றி பிரேஸில் மக்களுக்குக் கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பேதமின்றி, ஜனநாயக மாண்புகளைப் பாதுகாக்கும் வகையில் ஆட்சி செலுத்தப் போவதாக டி சில்வா உறுதியளித்துள்ளார்.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli