Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அமீரக தேசிய தினம்‌: வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்‌...!!



துபாயின்‌ சாலைகள்‌ மற்றும்‌ போக்குவரத்து ஆணையமானது அமீரக தேசிய தின விடுமுறையை முன்னிட்டு, டிசம்பர்‌ 1 வியாழன்‌ முதல்‌ டிசம்பர்‌ 3
சனிக்கிழமை வரை அனைத்து பொது வாகன நிறுத்தங்களிலும்‌ வாகன
ஓட்டிகள்‌ இலவசமாக பார்க்கிங்‌ செய்து கொள்ளலாம்‌ என தெரிவித்துள்ளது.


இந்த இலவச பார்க்கிங்கானது மல்டி லெவல்‌ பார்க்கிங்‌ டெர்மினல்களுக்கு
மட்டும்‌ பொருந்தாது என்றும்‌ ஆணையம்‌ விளக்கமளித்துள்ளது.

மேலும்‌ வார விடூx`முறையான ஞாயிற்றுக்கிழமை அன்று பார்க்கிங்‌
இலவசம்‌ என்பதால்‌ வாகன ஒட்டிகள்‌ நான்கு நாட்கள்‌ இலவச பார்க்கிங்கை
பெறலாம்‌ என கூறப்பட்டுள்ளது.


அத்துடன்‌ வாடிக்கையாளர்‌ மகிழ்ச்சி மையங்கள்‌ இயங்கும்‌ நேரங்களும்‌
இந்த நாட்களில்‌ மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்‌ பொது பேருந்துகள்‌, துபாய்‌ மெட்ரோ மற்றும்‌ டிராம்‌
ஆகியவற்றிற்கான திருத்தப்பட்ட சேவை நேரத்தையும்‌ RTA
அறிவித்துள்ளது.

அதன்படி நவம்பர்‌ 30 முதல்‌ டிசம்பர்‌ 3 வரை, மெட்ரோவின்‌ ரெட்‌ மற்றும்‌
கிரீன்‌ லைன்‌ காலை 5 மணி முதல்‌ நள்ளிரவு 1 மணி வரை செயல்படும்‌.
டிசம்பர்‌ 4 ஆம்‌ தேதி, இரு வழித்தடங்களும்‌ காலை 8 மணி முதல்‌ 12 மணி
வரை (நள்ளிரவு ) செயல்படும்‌ என கூறப்பட்டுள்ளது.

அதே போல்‌ நவம்பர்‌ 30 முதல்‌ டிசம்பர்‌ 3 வரை, காலை 6 மணி முதல்‌
நள்ளிரவு 1 மணி வரை டிராம்‌ சேவையில்‌ இருக்கும்‌ என்றும்‌ டிசம்பர்‌ 4ம்‌
தேதி காலை 9 மணி முதல்‌ நள்ளிரவு 1 மணி வரை டிராம்‌ இயங்கும்‌ எனவும்‌
தெரிவிக்கப்பட்டுள்ளது.

THANKS: KHALEEJTAMIL

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli