Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

IND Vs SA: 3 ஆவது 20 ஓவர் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு... தொடரை தன்வசப்படுத்துமா இந்தியா?

 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே இன்று 3 ஆவது இருபது ஓவர் போட்டி நடைபெற உள்ளது. தொடரை இந்தியா வென்ற நிலையில் ஆறுதல் வெற்றி பெற தென்னாப்பிரிக்கா முனைப்புடன் உள்ளது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் இன்று மூன்றாவது ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, கே.எல்.ராகுலுக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. மேலும் சில வீரர்கள் மாற்றப்பட்டு ஸ்ரேயர்ஸ் அய்யர், ஷபாஷ் அகமது உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தபோதும் ஆறுதல் வெற்றிக்காக தென்னாப்பிரிக்கா அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli