Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஹிஜாப் போராட்டம் திட்டமிட்ட சதி - ஈரான் தலைவர்...!

 

ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி என்று அந் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி தெரிவித்த்ள்ளார்.

ஈரான் நாட்டில் வசிக்கும் பெண்கள் 7 வயதிற்கு மேல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில், 22 வயது பெண் மாசா அமினி ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பொலிஸார் கடுமையாகத் தாக்குதல் நடத்தினர் இதில் அவர் கோமா நிலைக்குச் சென்ற நிலையில் கடந்த 17 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஈரானில் அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் 91 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், ஹிஜாப்பை எரித்தும் தலைமுடியை வெட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில, ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் என்பது திட்டமிட்ட சதி ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க நாடும், இஸ்ரேல் நாட்டினரும் இப்போராட்டத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.

ஈரான் அமெரிக்கா, இஸ்ரேலுடன் பகை பாராட்டி வரும் நிலையில், அயதுல்லா இப்படிக் கூறியுள்ளது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli