Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரான்ஸிற்கு சென்ற இலங்கையர்களின் பரிதாப நிலை...!

 


சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு படகு வழியாக தப்பி சென்ற இலங்கையர்கள் தற்போதே பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ள போதிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு மூலம் பிரான்ஸின் ரீயூனியன் தீவை 46 பேர் அடங்கிய குழுவொன்று வந்து சேர்ந்தது. இவர்களை உள்வாங்கிய பிரெஞ்சு அதிகாரிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பல்வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

46 பேரில் சிலர் ரீயூனியன் தீவிலும் சிலர் சென்ரெனிஸிலுள்ள ஹோட்டல் ஒன்றிலும் சிலர் அகதிகள் காத்திருப்புப் பகுதியிலும் நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமது புகலிட கோரிக்கை தொடர்பில் சென்ரெனிஸிலுள்ள நீதிமன்றத்திற்கு தொடர்ந்தும் செல்வதனையும் வருவதனையுமே செயற்பாடாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் அவர்களில் பெரும்பாலோர் தங்கள் நிர்வாகக் காவலை முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். எனினும் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை சந்தித்த அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச மன்னிப்பு அமைச்சர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஹோட்டலில் பொதுவான அறையில் ஒன்றில் நான்கு இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். “இலங்கையில் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன. ரீயூனியனில், நான் பாதுகாப்பாக உணர்கிறேன் என புகலிடம் கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான் இலங்கையில் இருந்தால் நான் இறந்துவிடுவேன் என மற்றொருவர் கூறியுள்ளார். எனினும் அகதிகளுக்கான காத்திருப்பு வலயத்தில், புலம்பெயர்ந்தோர் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 பேருக்கு ஒரு அறையில் உள்ளனர். 5 நிமிடங்கள் கூட வெளிய செல்ல முடியாது.

உறங்கவும் மலசலகூடத்திற்கு செல்ல மாத்திரமே முடியும். சிறையில் வாழும் ஒரு வாழ்க்கையை வாழ்கின்றார்கள். நாள் ஒன்றுக்குள் 15 நிமிடங்களுக்கு மேல் அவர்களால் சூரியனை கூட பார்க்க முடியாத நிலை.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்த 46 பேரில் இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு பிள்ளைகள் மற்றொரு காத்திருப்புப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கும் பகுதிக்கு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

சிறுவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பெரியவர்களே கடினமான சூழ்நிலைகளில் உள்ள நிலையில் சிறுவர்களுக்கு இது இன்னும் பயங்கரமானதாக இருக்கும் என அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான கந்தசாமி பிள்ளை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli