கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,44,938 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22,549- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் . 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,93,409- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,980ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று மட்டும் 23,791 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh