Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச்...!

 

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இவரின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகளை குவித்த போதும், பிஞ்ச்சால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. இந்த நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரோன் பிஞ்ச் அறிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெறவுள்ளார்.



35 வயதாகும் ஆரோன் பிஞ்ச் கடந்த 2013-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிஞ்ச் 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5401 ரன்களும், 92 டி20 போட்டிகளில் 2,855 ரன்களும் விளாசியுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகளில் 278 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினாலும், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் ஆரோன் பிஞ்ச் கேப்டனாக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli