Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மரக்கறிகளின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சி...!

 

உள்ளூர் பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறி வகைகளின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் 10இலட்சம் கிலோ மரக்கறிகளும் 05இலட்சம் கிலோ உள்ளூர் வெங்காயமும் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை அதிகரிப்புடன் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதுடன்,போஞ்சி மற்றும் கறி மிளகாய் தவிர மலையகம், தாழ்நிலம், யாழ்ப்பாணம் மற்றும் வடமேல் மாகாணங்களின் மரக்கறி வகைகளின் கையிருப்பு குறைந்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஒரு கிலோ போஞ்சி 400 முதல் 450 ரூபா வரையிலும், ஒரு கிலோ கறி மிளகாய் 600 முதல் 650 ரூபா வரையிலும், ஒரு கிலோ 80 முதல் 90 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட கெக்கரி மற்றும் வெள்ளரிக் காய்களின் மொத்த விலை நேற்று 35 முதல் 40 ரூபா வரையிலும் குறைத்து விற்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலையும் 450 ரூபாவில் இருந்து 200 ரூபாவாகக் குறைந்துள்ளது.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli