Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கேட்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங் - ஆக்ரோஷமாக மாறிய ரோகித் சர்மா...!

  Arshdeep-Singh-Drops-Sitter-Rohit-Sharma-Reaction-Goes-Viral

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது ரவி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங். இதையடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் ஆசிஃப் அலியும் குஷ்தில் ஷாவும் இணைந்து 19 ரன்களை விளாசினர். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட பாகிஸ்தானின் வெற்றி உறுதியாகிவிட்டது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன் தான் தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டது.

image

ஆசிஃப் அலியின் கேட்ச்சை அர்ஷ்தீப் சிங் பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கக்கூடும். கேட்சை விட்ட அர்ஷ்தீப் சிங்கை, களத்திலேயே கேப்டன் ரோகித் சர்மா பயங்கரமாக திட்டினார். இதையடுத்து இந்திய அணியின் இந்த தோல்விக்கு அர்ஷ்தீப் சிங்தான் முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், 'இக்கட்டான சூழ்நிலைகளில் இதுபோன்று தவறுகள் நடப்பது இயல்பானது தான்' என்று அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

image

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், ''இளம் வீரரை இப்படி கடுமையாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் யாரும் கேட்சை வேண்டுமென்றே விடமாட்டார்கள். இந்திய வீரர்கள் விளையாடிய விதம் பெருமிதமாக இருக்கிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடினார்கள். சொந்த நாட்டின் வீரர்களை கஷ்டமான சூழலில் தள்ளி மிகவும் தரக்குறைவாக பேசும் சிலரை அவமானமாக பார்க்கிறேன். அர்ஷ்தீப் சிங் மிகவும் தங்கமானவர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli