Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கேரளாவில் மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி!

 

கேரள மாநிலம் கொல்லத்தில் ஒருநாள் ஓய்வுக்கு பின் இன்று ராகுல் காந்தி மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார். 

திருவனந்தபுரம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்திரை' தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் 150 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட பிறகு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று ஒருநாள் நடைபயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் 'பாரத் ஜோடோ யாத்திரையை' எட்டாவது நாளான இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் மீண்டும் தொடங்கினார்.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli