Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சண்டையே இல்லாமல் சீனாவுக்கு இந்திய மண்ணை தாரை வார்த்து கொடுத்த பிரதமர் மோடி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு...!

 

சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1000 சதுர அடி இந்திய மண்ணை தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 

எல்லையில் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ள 1000 சதுர அடியை இந்திய அரசு எப்படி மீட்கும் என்று தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1000 சதுர அடி இந்திய மண்ணை தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. ஏப்ரல் 2020-க்கு முன்னர் இருந்த நிலவரப்படி எல்லையை வரையறுக்க சீனா ஒப்புக் கொள்ளவில்லை. 

இந்திய அரசாங்கம், இந்த 1000 சதுராடி எப்படி மீட்டெடுக்கப்படும் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்று இந்தியா, சீனப் படைகள் கிழக்கு லடாக் பகுதியில் கோக்ரா ஹைட்ஸ் எனும் பகுதியில் பேட்ரோலிங் பாயின்ட் 15-ல் இருந்து தத்தம் படைகளைத் திரும்பப் பெற்றன. இதை பெரிய முன்னேற்றமாக மத்திய அரசும் பாஜகவும் கூறிவரும் நிலையில், ராகுல் காந்தி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli